என்ன நான் முதலமைச்சாரா? -உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கோவை மாவட்டத்தில் காளப்பட்டியில் தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார்.
இந்த முகாமை தொடங்கி வைத்து அவர் பேசும்போது, துணை முதல்வர் அல்லது அமைச்சர் பொறுப்புகளுக்கு என்னை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் பேசியுள்ளனர்.
ஆனால், எனக்கு அந்த பொறுப்புகளின் மீது எந்த வித ஆசையும் இல்லை. அந்த பொறுப்புகளுக்கு ஆசைப்படாதவன் நான் என்று பேசினார். தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள், இளம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் தொடர்ந்து உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
தி.மு.க.வின் அனைத்து போஸ்டர்கள், பேனர்களிலும் உதயநிதி ஸ்டாலினின் படம் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. உ
தயநிதி விரைவில் அமைச்சரவையில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், அவர் தனக்கு அமைச்சர் மற்றும் துணை முதல்வர் பதவிகளின் மீது ஆசை இல்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.