பிறந்தநாளில் உதயநிதிக்கு அன்பில் மகேஷ் கொடுத்த பரிசு - வைரலாகும் புகைப்படம்

udhayanithi-anbilmakesh-birthday-gift
By Nandhini Nov 27, 2021 09:42 AM GMT
Report

திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று 44-வது பிறந்தநாளை கொண்டாடு வருகிறார்.

இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர், கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லத்திற்கு சென்று கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் அமைச்சரும், உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்தநாள் பரிசாக புகைப்படம் ஒன்றை அன்பில் மகேஷ் பரிசாக வழங்கி இருக்கிறார்.

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் -