நாளை அமைச்சராக பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin M K Stalin Government of Tamil Nadu
By Thahir Dec 13, 2022 03:05 AM GMT
Report

நாளை காலை அமைச்சராக பதவியேற்க உள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

நாளை பதவியேற்பு 

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின்.

இவருக்கு அண்மையில் மீண்டும் திமுக தலைமை கழகம் இளைஞரணி செயலாளர் பதவியை மீண்டும் வழங்கியது.

இதையடுத்து அமைச்சர்கள் பலரும் தம்பி உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கு சம்மதம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை அமைச்சராக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை அமைச்சராக பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhistalin Will Take Over Minister Tomorrow

அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சராக பதவியேற்ற பின் அவருக்கென தனி அறை அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.

இப்பணியில் சுமார் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்ட வருகின்றனர். உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது உள்ள அமைச்சர்களின் இலாக்காகள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நகராட்சித்துறை அமைச்சராக உள்ள கே.என் நேருக்கு கூடுதல் துறை ஒதுக்கப்படலாம் என்றும், வனத்துறை உள்ளிட்ட சில துறைகள் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.  

இந்த நிலையில் ஆளுநர் மாளிகை உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்க உள்ளதை உறுதி செய்துள்ளது.