நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள் - அமைச்சர் உதயநிதி கோரிக்கை!
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவின் நூல்கள் வெளியிட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "சேலம் மாநாட்டை மிகச் சிறப்பான வெற்றி மாநாடாக மாற்றி காண்பித்த உங்கள் அனைவருக்கும், இளைஞர் அணி தம்பிமார்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர் அணி மாநாடு மிகச் சிறப்பாக நடத்தி காண்பித்து இருக்கிறோம்.
கோரிக்கை
டி.ஆர்.பாலு மாமாவை பிறந்த குழந்தையிலிருந்து எனக்குத் தெரியும். என்னை தூக்கி வளர்த்ததில் அவரும் மிக மிக முக்கியமானவர்.
முதலமைச்சரை எல்லோரும் தளபதி என்று அழைப்பார்கள், அதற்கு முன்பாகவே இளம் தென்றல் என்று அழைத்தவர் டி.ஆர்.பாலு. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள்.
அனுபவம் முக்கியம் தான் இருந்தாலும் தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், முதல்வர் யோசித்தாலும் நீங்கள் தலைவரிடம் அதைச் சொல்ல வேண்டும்” என்றார்.