இபிஎஸ் டெல்லிக்கு போறதா சொல்றாங்க; இதை மட்டும் செய்யுங்க - உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு, உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக ஸ்தூபா ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் ( Stupa Sports Analytics ) மற்றும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (UTT) இணைந்து WTT World Table Tennis Star Contender chennai 2025 போட்டியை நடத்துகிறது.
அதற்கான டிராபியின் கோப்பையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை இந்த WTT டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெறவுள்ளது.
இபிஎஸ்க்கு வேண்டுகோள்
இதனை ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்த போட்டிகளுக்காக தமிழக அரசு 3 கோடியே 20 லட்சம் ஒதுக்கி உள்ளது. 25 நாடுகளை சேர்ந்த158 வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் இருந்து 19 வீரர் வீராங்கனைகள் இந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துக்கொள்ள உள்ளனர். நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அதனை தொடர்ந்து வலியுத்துவோம்.
முதலமைச்சர் கேட்டுக்கொண்டது போல முக்கியமான யாரையோ ஈபிஎஸ் பார்க்க போவதாக சொல்கிறார்கள். அப்படி அவர்களை சந்திக்கும் போது இரு மொழி கொள்கை குறித்து தயவு செய்து அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.