கலைஞருக்கு பிடித்த வீரர் தோனி - உதயநிதி போட்ட ட்வீட்டால் நெகிழ்ந்த ரசிகர்கள்

Ms dhoni Udhayanidhi stalin
By Petchi Avudaiappan Jul 07, 2021 11:16 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களும் கிரிக்கெட் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்- முத்தமிழறிஞருக்கு பிடித்தமான விளையாட்டு வீரர் தோனி அவர்களின் பிறந்த நாளில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.

பின்தங்கிய சமூகபொருளாதார சூழலில் இருந்து தன் திறமையால் உயர்ந்த தோனி அவர்கள் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி" என பதிவிட்டுள்ளார்.