திமுக இளைஞரணி மாநாடு - சுடர் தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி!
தி.மு.க இளைஞரணி மாநாட்டின் சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இளைஞரணி மாநாடு
சேலத்தில் வரும் ஜனவரி 21-ம் தேதி மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு தி.மு.க. இளைஞரணி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் மாநாடு என்பதால், இதை வெற்றிகரமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சுடர் தொடர் ஓட்டம்
அந்த வகையில் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கும் விதமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மாநாட்டையொட்டி சென்னையிலிருந்து மாநாடு சுடர் தொடர் ஓட்டத்தை இன்று உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
பதவி பறிப்பு முதல் பழிவாங்கல் நடவடிக்கைகள் வரை...! அம்பலப்படுத்திய சிறீதரன்: வெளிவந்த உண்மைகள் IBC Tamil
கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID IBC Tamil