இன்று பிரதமரை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Udhayanidhi Stalin
Tamil nadu
By Thahir
இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இன்று பிரதமருடன் சந்திப்பு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழாவில் கலந்து கொண்டார்.

இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அதன்படி இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.