மக்கள் வைத்த கோரிக்கை.. நிறைவேற்றுவதாக உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின்

Corona Udhayanidhi Stalin Chepauk
By mohanelango Jun 02, 2021 11:36 AM GMT
Report

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொகுதியில் நிவாரணம் வழங்கிய போது பார்டர் தோட்டம், LGN சாலை குடிசைப்பகுதி மக்கள் அவர்கள் நிலையை எடுத்துக்கூறி அப்பகுதியில் குடிசைமாற்று வாரியக்குடியிருப்பு வீடுகளை கட்டித்தர வேண்டுமென கூறினர்.அவர்களது கோரிக்கையை அரசின் கவனத்துக்கு எடுத்து சென்று, நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தேன். 

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி, 119வது வட்டம், BSNL ஊழியர் குடியிருப்பு பகுதியில் அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை கொரோனா கால நிவாரணமாக பொதுமக்களிடம் வழங்கினோம்.கொரோனா தடுப்பூசி முகாம்களை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டினேன்.