உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பிரபல நடிகரும், திமுக தலைவரான ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிடுகிறார். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின், இன்று மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் உதயநிதி குறிப்பிட்ட சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது, அதன்படி, அசையும் சொத்து ரூபாய் 21.13 கோடியும், அசையா சொத்து ரூபாய் 6.54 கோடியும் உள்ளது. சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரூபாய் 1.77 கோடியில் ரேஞ்ச் ரோவர் கார், தயாரிப்பு நிறுவனத்தில் ரூபாய் 7.36 கோடி முதலீடு செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசுகையில், எம்எல்ஏ பதவி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவி, வாரிசு அரசியல் என மக்கள் நினைத்தால் அவர்கள் நிராகரிகட்டும் என தெரிவித்துள்ளார்.