உதயநிதி ஸ்டாலினுடன் வலிமை பட தயாரிப்பாளர் திடீர் சந்திப்பு

Valimai Boney Kapoor Udhayanidhi Stalin
By Thahir Oct 23, 2021 05:42 AM GMT
Report

தயாரிப்பாளர் போனி கபூருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் முதன்முறையாக நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்தார்.

தற்போது அதே கூட்டணி மீண்டும் வலிமை படத்துக்காக இணைந்துள்ளது. மேலும் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்தப் படம் ஹிந்தியில் ஆயூஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆர்டிக்கள் 15 படத்தின் தமிழ் பதிப்பாகும்.

இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் போனி கபூருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுடன் வலிமை பட தயாரிப்பாளர் திடீர் சந்திப்பு | Udhayanidhi Stalin Valimai Boney Kapoor

அந்தப் பதிவில், எனது நெஞ்சுக்கு நீதி திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நிர்வாகத் தயாரிப்பாளர் ராகுல் இருவரும் இன்று என்னை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

நெஞ்சுக்கு நீதி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாய் நிச்சயம் ஒலிக்கும். நன்றி என்று தெரிவித்துள்ளார். நெஞ்சுக்கு நீதி படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், மயில்சாமி, சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு, ராட்சசன் சரவணன், ஆரி அர்ஜுனன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் மோசன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.