டிரம்ப் கதி தான் ஓபிஎஸ்க்கும் ஏற்படும்: உதயநிதி ஸ்டாலின் அதிரடி

modi ops eps
By Jon Feb 16, 2021 12:12 PM GMT
Report

பிரதமர் மோடி கடந்த 14-ம் தேதி பல திட்டங்களை தொடங்கி வைக்க ஒருநாள் பயணமாக சென்னை வந்திருந்தார். இந்த நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி முதல்வர் ஈ.பி.எஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரின் கரங்களை உயர்த்தி போஸ் கொடுத்தார்.

அதிமுக - பாஜக கூட்டணி ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில் அதிமுகவிற்குள் இருந்த சலசலப்பு இதன் மூலம் முடிவுக்கு வந்ததாக சொல்லப்பட்டது. இதற்குப் பிறகு முதல்வரும் பிரதமரும் தனியே பத்து நிமிடம் சந்தித்து பேசினர். இந்நிலையில் மோடியால் கை உயர்த்தப்பட்ட ட்ரம்புக்கு ஏற்பட்ட கதிதான் ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு ஏற்படும் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் இந்தியா வருகை தந்தபோது மோடியுடன் கையை தூக்கி உயர்த்தி காட்டினார். இதனை அடுத்து சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப் தனது பதவியை இழந்தார்.

LN25M

இந்த நிலையில் நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, ஓபிஎஸ் இபிஎஸ் கைகளை உயர்த்தி காட்டினார். இது குறித்து கருத்து கூறிய திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மோடியால் கை உயர்த்தப்பட்ட டிரம்ப்க்கு ஏற்பட்ட கதி என்னவோ அதுதான் ஓபிஎஸ் இபிஎஸ்க்கும் ஏற்படும் என தெரிவித்துள்ளார். மேலும் திமுக ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு அடியோடு ரத்து செய்யப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்