பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது: உதயநிதி ஸ்டாலின்
காவல்துறையில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத மாநிலமான தமிழகத்தை வெற்றி நடை போடுகிறது என பொய் கூறுவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 10-வது முறையாக களம் காணும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனை ஆதரித்து.
திமுக -ன் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவலம், பள்ளிகுப்பம், சத்தியாநகர் உள்ளிட்ட பகுதிகளிலும், கே.வி.குப்பம் தொகுதியிலும் வேன் மூலம் பரப்புரை மேற்கொண்டார். அவர் தனது பரப்புரையில் பேசும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியாது. அந்த அம்மாவின் உறவினரான தீபா, விவேக் போன்றவரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அவர் , மருத்துவமனையில் இருந்தபோது ஒரு சிசிடிவி கூட வேலை செய்யவில்லை எனக் கூறினார்கள்.
மரணத்தில் மர்மம் இறப்பதாக கூறிய ஓ.பி.எஸ், 12 முறை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகவில்லை. தமிழகத்தில் முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை. என கூறிய உதயநிதி,மோடியின் அடிமை ஆட்சியை அகற்ற வேண்டும். 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் துரைமுருகனை வெற்றிபெற செய்ய வேண்டும்.
நாடாளுமன்றத்தில் கொடுத்த வெற்றியைபோல் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றியடைய செய்ய வேண்டும். துரைமுருகன் இந்த முறையும் வென்றால் அமைச்சராவார். அப்படி அவர் அமைச்சரானால், பல திட்டங்களை நிறைவேற்றுவார் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.