சேகர் ரெட்டி உடன் உதயநிதி ஸ்டாலின் - வைரலாகும் புகைப்படம்.!
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு பொது மக்கள் நன்கொடை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
அதன்படி பல்வேறு பிரபலங்களும் நிறுவனங்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு தொடர்ந்து நன்கொடை வழங்கி வந்தன.
அந்த வரிசையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த ஜேஎஸ்ஆர்ஐடிபிஎல் நிறுவனத்தின் தலைவர் ஜெ.சேகர் ரெட்டி ஒரு கோடி மதிப்பிலான காசோலையை கொரோனா நிதியாக வழங்கினார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்றுள்ளது வைரலாகி வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த்தாக ஜெ.சேகர் ரெட்டி சர்ச்சையில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.