தவெக-வை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூரின் செங்கிப்பட்டியில் இளைஞரணி கூட்டம் நடைபெற்றது, இதில் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் திட்டங்களை ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பி பார்த்து பாராட்டி வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் அமையப்போவது திமுக ஆட்சி தான், இளைஞரணியில் மட்டும் 5 லட்சம் பேர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக செயல்திட்டங்களை பார்த்து எதிர்கட்சிகள் கதறிக்கொண்டிருக்கின்றன. தேர்தல் வருவதால் மோடி, அமித்ஷா அடிக்கடி தமிழகம் வருவார்கள், ஆனால் நிதி வராது. அவர்களின் வியூகம் இங்கு பலிக்காது என தெரிவித்துள்ளார்.

மேலும் எந்தவொரு கொள்கையும், கோட்பாடும், லட்சியமும் இல்லாமல் தமிழகத்தில் ஒரு கோஷ்டி சுற்றிக்கொண்டிருக்கிறது, அவர்களுக்கு அரசியல் ஒரு பொழுதுபோக்கு என கடுமையாக தவெக-வை விமர்சித்தார்.
குறிப்பாக டெல்லிக்கும் தமிழகத்துக்கும் இடையே நடக்கும் போர் தான் வருகிற சட்டப்பேரவை தேர்தல், தமிழகம் என்றும் டெல்லிக்கு தலைகுனியாது என பேசினார்.