மோடி ஆட்சி செய்ததால் இந்தியாவிற்கு கொரோனா வரவில்லை என்று 30 ஆண்டுகளுக்கு பிறகு சொல்வார்கள் - கலாய்த்த உதயநிதி!
கொரோனா நோய் குறித்து புத்தகங்களில் நிறைய வெளிவர வேண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புத்தக வெளியீடு
அமைச்சர் மா. சுப்பிரமணியன் எழுதிய "கொரோனா.. உடல் காத்தோம்.. உயிர் காத்தோம்.." என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் "நம்முடைய திராவிட மாடல் அரசு கொரோனா இரண்டாவது அலையை எப்படி கட்டுக்குள் கொண்டு வந்தது என்பதை மிகத்தெளிவாக, விவரமாக அண்ணன் இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
பாராட்டிற்குரியது
இந்த புத்தகத்திற்கு கொடுத்திருக்கின்ற தலைப்பே மிகவும் பாராட்டிற்குரியது. கொரோனா நோய் குறித்து புத்தகங்களில் நிறைய வெளிவர வேண்டும்.
இல்லையென்றால் ஒரு 20, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகம் முழுவதும் கொரோனா வந்தது. அப்போது பாஜக ஆட்சி செய்தது. மோடி ஆட்சி செய்தார். அதனால்தான் இந்தியாவிற்கு கொரோனா வரவில்லை என்று சொன்னாலும் சொல்வார்கள்" என்றார்.