தற்போது அதிமுக ஆட்சி இருந்திருந்தால் தமிழ்நாடு பெயர் மாறியிருக்கும் - உதயநிதி

Udhayanidhi Stalin
By Thahir Mar 04, 2023 03:20 AM GMT
Report

தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர்ந்து இருந்தால் தமிழ்நாட்டின் பெயர் மாற்றப்பட்டு இருக்கும் என அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.

நேற்று நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரியில் நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கனாரின் சிலை நிறுவப்பட்டது .

தற்போது அதிமுக ஆட்சி இருந்திருந்தால் தமிழ்நாடு பெயர் மாறியிருக்கும் - உதயநிதி | Udhayanidhi Stalin Speech

இந்த சிலையை திறக்கும் விழாவில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,மாவட்ட ஆட்சியர் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் நாமக்கல் கவிஞர் சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பிறகு அந்த விழாவில் பேசியஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் கவிஞரின் புகழை பேசினார்.

மேலும், பெண்களுக்கு கல்வி முக்கியம் எனவும் குறிப்பிட்டு பேசினார். அதற்கு பிறகு பேசிய அவர், தமிழகத்தின் பெயரையே தமிழ்நாட்டில் ஒருவர் மாற்ற முயற்சித்தார்.

நல்ல வேளையாக இங்கு திமுக ஆட்சி நடக்கிறது. ஒருவேளை அதிமுக ஆட்சி நடைபெற்று இருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டின் பெயர் மாற்றப்பட்டு இருக்கும். என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.