தவெக அரசை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
திமுக ஆட்சியில் 11.19 சதவிகிதத்துடன் இந்தியாவில் முன்னேற்றமடைந்த முதல் மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை இன்று பாதாளத்தில் தள்ளிவிட்டனர் என தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூரில் நடந்த திருமண நிகழ்வொன்றில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூரில் பேசும் போது கவனமாக பேச வேண்டியுள்ளது.
கைது நடவடிக்கைக்கு பயந்தவன் கிடையாது. விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தின் போது காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று தான் பேசினேன், டம்மி முதல்வர், கேடுகெட்ட அரசாங்கம், வெக்கங்கெட்ட முதல்வர் என்றெல்லாம் பேசினேன், அதற்கெல்லாம் கோபம் வரவில்லை.

காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னதும் கோபம் வந்துவிட்டது, இரவோடு இரவாக போலிசாரை அனுப்பி கைது செய்தனர். ஆனால் நீதிமன்ற விசாரணையில் கைது செய்யவில்லை, விசாரணை என பல்டி அடித்தனர்.
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்க நிதி இல்லை ஆனால் கார் வழங்க முடிவு செய்துள்ளனர்.
தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றுவதற்கு பதில் இல்லை, சட்டப்பேரவையில் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிப்பதில்லை, அமைச்சர்கள் பதில் கொடுத்தாலும் திசைதிருப்புகின்றனர். ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு தேவை 4 ரீல்ஸ்.
திமுக ஆட்சியில் 11.19 சதவிகிதத்துடன் இந்தியாவில் முன்னேற்றமடைந்த முதல் மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை இன்று பாதாளத்தில் தள்ளிவிட்டனர் என தெரிவித்தார்.
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan