நேத்து ஆரம்பிச்சு இன்னைக்கே முதல்வர் ஆக ஆசை - சாடிய உதயநிதி

Udhayanidhi Stalin DMK Chennai
By Sumathi Dec 03, 2025 06:06 PM GMT
Report

நேற்று இயக்கத்தை ஆரம்பித்து இன்றைக்கே முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக சாடியுள்ளார்.

பெரியாரிஸ்ட் 

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிறந்தநாள் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

udhayanidhi stalin

“1979 ஆம் ஆண்டு, அப்போது எனக்கு 2 வயது. கலைஞரின் கோபாலபுரம் வீட்டின் முன்பு கலைஞர், நம்முடைய முதல்வர், முதல்வரின் கையில் குழந்தையாக நான் என மூன்று பேரும் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினோம்.

உதயநிதி சாடல்

இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் அது. கலைஞர் வழியில், தலைவர் வழியில் மூன்றாம் தலைமுறை பெரியாரிஸ்ட் என சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.

மன்சூர் அலிகான் சாகும்வரை உண்ணாவிரதம் - என்ன காரணம்?

மன்சூர் அலிகான் சாகும்வரை உண்ணாவிரதம் - என்ன காரணம்?

ஆனால் இப்போதோ நேற்று இயக்கத்தை ஆரம்பித்து இன்றைக்கே முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற ஆசையில் பலர் வருவதாக” தெரிவித்துள்ளார்.