பண்டிகை நேரம் பார்த்து விலையை ஏற்றி இருக்கிறார்கள் - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

Udhayanidhi Stalin
By Karthikraja Oct 27, 2026 03:10 PM GMT
Report

udhayanidhi stalin slams for aavin price hike: பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையை ஏற்றி இருக்கிறார்கள் என உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

பண்டிகை நேரம் பார்த்து விலையை ஏற்றி இருக்கிறார்கள் - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் | Udhayanidhi Stalin Slams For Aavin Price Hike

இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?

நடத்துவது ஆட்சியும் இல்லை, செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?

இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். 

இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

மின்சாரத்துறை அமைச்சர் விளக்கம்

அதேவேளையில், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "37 முதல் 41 ரூபாய் வரையிலான குறிப்பிடப்பட்ட விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப் போவதில்லை.

நாங்கள் இன்று டெண்டரைத் திறந்துள்ளோம், மேலும் பல விற்பனையாளர்கள் மிக அதிக விலைகளைக் குறிப்பிட்டுள்ளனர். இந்த விலைகள் நியாயமற்றவை. 

அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான மின்சாரம் எங்களிடம் போதுமான அளவு இருகிறது. இனி அதிக விலைக்கு எரிவாயு கொள்முதல் செய்யப்படாது, மேலும் கீழ்க்காணும் டெண்டரை ரத்து செய்யுமாறு நான் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.