உதயநிதியை பார்க்கும்போது பெரியாரை பார்க்கிற மாதிரி இருக்கிறது... - பதிவிட்டவருக்கு சீமான் பதிலடி
ஜீ ஸ்டூடியோ - போனி கபூரின் பே வியூ புரோஜக்ட் மற்றும் ரோமியா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அருண்ராஜ் காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார்.
படத்தைப் பார்த்த பின் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்து விட்டு அரசியல் தலைவர்கள் தனது சமூகவலைத்தளங்களில் பாராட்டியும், விமர்சனம் செய்தும் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தை பார்த்து விட்டு தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், உதயநிதியை காக்கிச் சட்டையில் பார்க்கும்போது பெரியாரை பார்ப்பது போலவே இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என்ன பெரியாருக்கு வந்த சோதனை என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.