திமுக-வில் மீண்டும் பல வாரிசுகளுக்கு சீட்டு, இதில் புதிதாக சேர்ந்த உதய், இது மன்னர்ஆட்சியா?
திமுக வாரிசுகளுக்கு சீட்டு வழங்கியது இதனால் தற்போது இது மன்னராட்சியா அல்லது மக்கள் ஆட்சியா என மக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது . சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தி.மு.கவின் வேட்பாளர்கள் பட்டியலில் வாரிசுகளுக்கு அதிக இடங்கள் ஒதுகப்பட்டுள்ளதாக தி.மு.க தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புது முகங்களுக்கு வாய்ப்பு மறுகப்பட்டுள்ளதோடு மூன்று தலைமுறைகளாக ஒரே குடுபத்திற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர், இதற்கு முதல் சான்று உதயநிதி ஸ்டாலின், கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்கிற ஒரே காரணத்தால் சுலபமாக மூன்றாவது வாரிசுக்கு, அதுவும் தலைநகரில் உள்ள சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட சுலபமாக வாய்ப்பு கிடைத்துள்ளது , பல தலைவர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது.
தி.மு.க சார்பில் போட்டியிடவுள்ள 173 வேட்பாளர்களின் பட்டியலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதில் பெரும்பாலும் ஏற்கனவே போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. குடும்ப கட்சி என்று ஏற்கனவே எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியல் அதை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த தேர்தலில் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி ராஜா வழங்கப்பட்டது, தொடர்ந்து இந்த முறையும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் அவரது மகன் ஐ.பி. செந்தில்குமாருக்கு பழனி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வருன் போட்டியிடவுள்ளார். இதேபோல், அன்பில் மகேஷ், ஆலடி அருணா, தங்கம் தென்னரசு ஆகிய இரண்டாம் தலைமுறை வாரிசுகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. முதல் தலைமுறை, இரண்டாம் தலைமுறை தாண்டி மூன்றாம் தலைமுறையாக வாழையடி வாழையாக தி.மு.கவின் சிற்றரசர்களாக உலா வரும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் ஆகியோருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் பட்டியல் மூலம் தி.மு.க என்பது வாரிசுகளின் கோட்டை என்பதை மீண்டும் நீருபித்துள்ளது என்று தி.மு.கவினரே விமர்சனம் செய்கின்றனர்.
மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி காலத்தில் கூட இது போன்று நடந்ததில்லை என்று அக்கட்சி தொண்டர்கள் குமுறுகின்றனர். வரும் விமர்சனங்களையும் , புகார்களையும் ஸ்டாலினும் பெரிதாக எடுத்துக்கொள்ளவதில்லை என்பது மற்றொரு துர்திஷ்டவசம்