பஞ்ச் டயலாக், ரீல்ஸ்- உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பதாக வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முதலமைச்சர் விஜய் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.
தற்போது தவெக ஆட்சி தான் நடைபெறுகிறது, அதை நீங்கள் நம்புங்கள் என நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.
முதலமைச்சருக்கு 15 கேள்விகளை முன்வைத்தேன், ஒரு கேள்விக்கு கூட பதில் இல்லை. வியாழக்கிழமை ஓடிவிட்டு திங்கள்கிழமை பதில் சொல்வதாக கூறினார், மனப்பாடம் செய்து ஒப்பிவித்தல் போட்டியை போல் தவறான கருத்துகளை ஒப்புவித்துள்ளார் என தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் பேசி முடித்ததும் விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு நாங்கள் கோரிக்கை வைத்தோம்.
முதலில் பேச அனுமதிக்கிறேன் என கூறிய சபாநாயகர் யாருடைய அழுத்தத்தினாலோ அனுமதியை மறுத்துவிட்டார். இதனால் தான் வெளிநடப்பு செய்தோம் என தெரிவித்தார்.