முதலமைச்சரின் மேடையை நோக்கி ஓட்டம் பிடித்த உதயநிதி ஸ்டாலின் - ஏன் தெரியுமா?
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்து ஏற்பாடுகளை திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் முன்னின்று செய்திருந்தார்.
மேடையை நோக்கி ஓடிய உதயநிதி
தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவில் அனைத்து நாடுகளின் வீரர்களை கவரும் வகையிலும் தமிழர்களின் பண்பாடை எடுத்து சொல்லும் வகையிலும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிறைவு விழா நேற்று கோலகலமாக நடைபெற்றது. விழாவில் இந்த விழாவில் அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசுகளை வழங்கினார்.
அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் மேடையின் கீழ் பார்வையாளராக அமர்ந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை அழைத்தனர் அப்போது மேடையை நோக்கி ஓடிவந்த உதயநிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நினைவு பரிசை பெற்றுக்கொண்டார்.