அன்னை சோனியா - சகோதரர் ராகுலை சந்தித்தேன் - உற்சாகத்தில் உதயநிதி..!!

Udhayanidhi Stalin Indian National Congress Rahul Gandhi Sonia Gandhi DMK
By Karthick Jan 05, 2024 01:55 AM GMT
Report

கேலோ இந்தியா நிகழ்ச்சிக்காக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்று பலருக்கும் அழைப்பிதழைகளை வழங்கி வருகிறார்.

உதயநிதி மகிழ்ச்சி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். தலைவர் சகோதரர் ராகுல் காந்தி இன்று(04-01-2024) டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில், அன்னை சோனியா காந்தியிடம் நலம் விசாரித்தேன்.

udhayanidhi-stalin-post-about-meeting-rahul-gandhi

ராகுல் காந்தி சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து கவலை தெரிவித்தார். தேசத்தின் மதச்சார்பற்ற நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்கான இந்தியக் கூட்டணியின் முன்னேற்றம் குறித்து நாங்கள் சுருக்கமாக விவாதித்தோம் என்று பதிவிட்டுள்ளார்.

மோடி சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திப்பதற்கு முன்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெல்லி சென்று நாட்டின் பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்து விழாவில் கலந்து கொள்ளும் படி அழைப்பிதழை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

uday meets pm modi in delhi

கேலோ இந்தியா போட்டிகள், தமிழகத்தில் வரும் 19 ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்போட்டி இளைஞர்களுக்கான தேசிய போட்டியாக நடத்தப்படுகிறது.இப்போட்டிகள் சென்னை, மதுரை, திருச்சி,கோவை ஆகிய 4 மாவட்டங்களில் ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.