கொளுத்தும் வெயிலில் காத்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்
முத்துக்கடை பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காந்தி அவர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் மட்டுமே போடப்பட்டுள்ளது. கொளுத்தும் வெயிலில் காத்திருந்த மக்களுக்கு நன்றி உதயநிதி. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜகவை துரத்தியடித்த கோபத்தில் 15000 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி.நிலுவை தொகையை தரவில்லை. ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை.
அம்மா இறந்த பிறகு இரண்டு அடிமைகள் சேர்ந்து நீட்டை புகுத்திவிட்டார்கள்.தேர்தலுக்கு தேர்தல் வந்து யமத்திட்டு போரவர்தான் மோடி. எடப்பாடியும் பன்னீர்செல்வமும் தமிழகத்தை மோடியிடம் விற்றுவட்டார்கள். அதிமுக யாரவது ஓட்டு கேட்டு வந்த மறைந்த அம்மா எப்படி இறந்தார்கள் என கேள்வி கோளுங்கள் பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளது. மருத்துவத்தில் நர்சிங் படிப்பிற்கும் நுழைவுத்தேர்வு கொண்டுவரவுள்ளது. புதிய கல்விக்கொள்கையை புகுத்த பாஜக முயல்கிறது.
இந்த முறை ராணிப்பேட்டை வேட்பாளர் காந்தியை 50,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
தலைவரருடைய மகனாக கேட்கிறேன் முத்தமிழரிஞர் கலைஞரினின் பேரன் கேட்கிறேன் உதயசூரியனில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் திமுகாவை வெற்றி பெற செய்யவேண்டும் என கேட்டுகொள்கிறேன் இந்நிகழ்ச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.