கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ விவகாரம் - ஆளுநரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin Governor of Tamil Nadu Kallakurichi Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Nov 26, 2026 05:23 AM GMT
Report

 udhayanidhi stalin met governor regard kallakurchi tvk mla issue: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கரிடம் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.

ஆளுநரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு, கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ விவகாரம் - ஆளுநரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhi Stalin Met Governor Regard Tvk Mla

திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங் தலைமையில் வழக்கை விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அருள் விக்னேஷ் கைது செய்யப்பட வேண்டும், அவரது பதவி பறிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் எனவும், கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என நேற்று DGPயை சந்தித்து மனு அளித்தார். 

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ விவகாரம் - ஆளுநரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhi Stalin Met Governor Regard Tvk Mla

இதனையடுத்து, இன்று தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு அளித்துள்ளனர்.