விஜயகாந்தை சந்தித்து உடல் நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைகக் இருக்கிறது. 

இந்தத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் 60,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

அமமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. 

இந்த நிலையில் இன்று உதயநிதி ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது எல்.கே.சுதீஷ் அவருடன் இருந்தார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்