‘‘மக்களே உங்களுக்காக உழைக்க காத்திருக்கேன்’’ உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

people election work udhayanidhi
By Jon Mar 12, 2021 03:42 PM GMT
Report

சேப்பாக்கம் ,திருவல்லிக்கேணி மக்களுக்காக உழைக்கக் காத்திருக்கிறேன்; ஆதரவு தாருங்கள் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. கூட்டணிக்கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்த நிலையில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதில், திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரிலும், முதன் முறையாக உதயநிதி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். முன்னதாகத் திமுக கூட்டணியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மஸ்தான், ஜின்னா அல்லது மதன் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியானது.

ஆனால் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் ,திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிற வாய்ப்பை வழங்கிய ஸ்டாலினுக்கும் கட்சி தலைமைக்கும் நன்றி.

சேப்பாக்கம் ,திருவல்லிக்கேணி மக்களுக்காக உழைக்கக் காத்திருக்கிறேன். ஆதரவு தாருங்கள். அன்பும் நன்றி என தெரிவித்துள்ளார்.