உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து களம் இறங்கும் குஷ்பூ.. நட்சத்திர தொகுதியாகும் சேப்பாக்கம்
சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை எந்நெந்த தொகுதிகள் என்பதும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இதில் சேப்பாக்கம் தொகுதியை பாஜக குறிவைப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சென்னையிலுள்ள சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினும், பாஜக சார்பில் நடிகை குஷ்புவும் நேரடியாக மோதவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். அதில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பாஜக சார்பில் இன்று லீக் ஆன வேட்பாளர் உத்தேச பட்டியலில், சேப்பாக்கம் தொகுதியில் நடிகை குஷ்பு போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பாக உதயநிதியும், பாஜக சார்பில் குஷ்புவும் நேரடியாக பலப்பரீட்சை நடத்தயிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
எனவே சேப்பாக்கம் தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.