நேர்காணலில் நடந்த சுவாரசியம்- உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த தகவல்
திமுக வேட்பாளர் நேர்காணலில் நிகழ்ந்த சுவாரஸ்யமான தகவல்களை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சியில் திமுகவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன் எழுதிய ஓடலாம் வாங்க எனும் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
அந்த புத்தகத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன் பெற்றுக்கொண்டார். பின்னர் நிகழ்ச்சியின்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட நான் விரும்புகிறேன்.
திமுக வேட்பாளர் நேர்காணலின்போது, எதற்கு வந்தாய் நேராக சேப்பாக்கம் தொகுதிக்கு சென்று வேலையைப் பார் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறினார். அதற்கு கட்சியின் தலைவர் ஸ்டாலின் என்ன சொன்னாரோ அதைத்தான் கேட்பேன் என நான் தெரிவித்தேன் என்று பேசினார்.
