தெர்மகோல், எடுபிடி, டயர்நக்கி- Udhayanidhi Stalin உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் பிரசாரக்கூட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் எதிரணியினரை மோசமான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர். அதாவது, ராணிப்பேட்டையில் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், அதிமுக அமைச்சர்களை விமர்சனம் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், திமுக வேட்பாளர் மக்களோடு மக்களாக இருந்து பல நலத்திட்டங்களை கொண்டு வந்தவர்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் உங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என்றார். மேலும் அதிமுக ஆட்சியில் அனைத்து அமைசர்களுக்கும் பட்டப்பெயர் உண்டு. நான் பட்டப்பெயர்களை கூறுகிறேன்; நீங்கள் அவர்களின் பெயர்களை சொல்லுங்கள் என்றவர், ‘தெர்மாக்கோல், மெயின்ரோடு, குட்கா, எடுபுடி, டயர்நக்கி’ என்று வரிசையாக பெயர்களை சொல்ல அங்கு கூடியிருந்தவர்கள் அமைச்சர்களின் பெயர்களை கூறினர்.
அப்போது மீண்டும் பேச தொடங்கிய உதயநிதி, ஓபிஎஸ்-ஐ டயர் நக்கி என்று நான் சொல்லவில்லை. அவர்களுடன் தற்போது கூட்டணி வைத்துள்ள ராமதாஸ் தான் அப்படி சொன்னார்; அவர்தான் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்தார். தற்போது பணம் வாங்கி கொண்டு அதிமுகவில் கூட்டணி வைத்துள்ளார்” என்றார்.