முதல் முறையாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்: வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 234 தொகுதிகளில் 173 தொகுதிகளில் தி.மு.க போட்டி இருகிறது. 61 தொகுதியில் கூட்டணி கட்சிகள் போட்டி இருகிறது. மொத்தம் 187 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் களமிறங்குகிறார்சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்படும் என்று ஏற்கனவே தகவல் வெளியானது .
அதே சமயம் சேப்பாக்கத்தில் உதயநிதி நின்றால் வெற்றி வாய்ப்பு அதிகம் என மாவட்ட செயலாளர் கூறியதாகவும் அதனால் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்வதாகவும் உதயநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார் . சேப்பாக்கம் தொகுதியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு அதில் குஷ்பு களமிறக்கப்படுவார் என்று தகவல் வெளியானது .
ஆனால் அதிரடி திருப்பமாக அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த முறை உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கால் பதிக்கலாம் என கூறப்படுகிறது