உதயநிதி ஸ்டாலினிடம் மருத்துவ உபகரணங்களை வழங்கிய ஈஷா!

covid udhayanidhi stalin esha
By Anupriyamkumaresan Jul 07, 2021 03:18 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in ஆரோக்கியம்
Report

கோவை மாவட்ட ஈஷா சார்பில் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினிடம் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றை ஒழிக்க போராடி வரும் இந்த சூழலில், ஏராளமானோர் தாமாக முன் வந்து, அவர்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலினிடம் மருத்துவ உபகரணங்களை வழங்கிய ஈஷா! | Udhayanidhi Stalin Eesha Gives Medical Equipmemts

அந்த வகையில், கோவை ஈஷா சார்பில், 300 உயர்தர வெண்டிலேட்டகர்கள் மற்றும் 18 லட்சம் உயர்தர முகக்கவசங்கள் திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான திரு.உதயநிதி ஸ்டாலினிடம் சென்னையில் நேற்று வழங்கப்பட்டது.

இது தொடர்பாக, உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனா தடுப்பு பணிகளுக்காக, 300 BiPAP non invasive ventilators மற்றும் 18 லட்சம் KN-95 முகக்கவசங்களை Isha Outreach - Covid Action சார்பில் நட்சத்திரா, தினேஷ் ராஜா ஆகியோர் இன்று என்னிடம் வழங்கினர். நன்றி.” என குறிப்பிட்டுள்ளார்.