என்னோட அனுபவம் உதயநிதியின் வயது : நெல்லையில் முதல்வர் பழனிசாமி பேச்சு!
தமிழகத்தில் தேர்தல் களம் நெருங்கியுள்ளதால் தமிழக கட்சிகள் தங்களது பரப்புரையினை களத்தில் இறங்கி வேலை செய்ய துவங்கியுள்ளனர். அந்த வகையில், நெல்லை வள்ளியூரில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் பழனிசாமி பொதுமக்களிடம் ஸ்டாலின் மனு வழங்குவது எல்லாம் மக்களை ஏமாற்றும் நாடகம் என கூறினார்.

மேலும், நாடாளமன்ற தேர்தலின்போது திண்ணைப் பிரச்சாரம் மூலம் ஸ்டாலின் பெற்ற மனுக்கள் எங்கு போனது? தேர்தல் வரும்போது நாடகமாடி மக்களை திசை திருப்பி வெற்றி பெறும் கட்சி திமுக என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி என் அனுபவம் உதயநிதியின் வயது, திமுக அறிவிப்புகளை எல்லாம் உதயநிதி தான் அறிவிக்கிறார். இனி மக்கள் மனு எழுதி பெட்டியில் போட வேண்டாம் 1100 போன் செய்தால் மக்களை தேடி அதிகாரிகள் வருவார்கள் என முதல்வர் பேசினார்.