பெண்களை அதிகம் விமர்சித்தது உதயநிதி ஸ்டாலின் தான் - எஸ்.ஆர்.சேகர் குற்றச்சாட்டு
பெண்களை அதிகம் விமர்சிப்பது உதயநிதி ஸ்டாலின் தான் என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் அவர்கள் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் திமுகவினர் மீது அடுக்கடுக்காக குற்றம்சுமத்தினார். இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில் அவர் பேசியது, தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பெண்களை மரியாதை கொடுப்பது மற்றும் பெண்களை போற்றுவது நம்முடைய நம் நாட்டின் கலாச்சாரம். அதுவும் தாயை மதிக்கும் கலாச்சாரம் நம்முடைய நாட்டின் முக்கியமானது. ஆனால், திமுக இதில் இருந்து வித்யாசமான கட்சி. நேற்று திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா முதல்வரின் தாயை பற்றி குறிப்பிட்ட வார்த்தைகள் சாதாரமான மரியாதைக்கு எதிரானது. அதை திருப்பி சொல்வது அதை விட மோசமானது.
இதற்கு முன்பு உதயநிதி சசிகலாவை இதுபோன்று விமர்சித்துள்ளார். ஆ.ராசா முதல்வரின் தாயை விமர்சித்தது. தமிழகத்தின் அத்தனை பெண்களையும் தவறாக பேசியதற்கு சமமானது. தாய்மையை போற்றும் தமிழகம் அரசியலில் பிரச்சாரம் என்று வந்துவிட்ட போது இப்படி அவதூறு பேசுவது ஏற்புடையது அல்ல. இதனை பாரதிய ஜனதா கண்டிக்கின்றது.
திமுக அவர் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும். இல்லை என்றால் இது திமுகவின் பாரம்பரியம் என்று தான் நாட்டு மக்கள் எடுத்துக் கொள்வார்கள். பொது வெளியில் தாய்மையை தவறாக பேசிய ஆ.ராசா மீது பாஜக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்படும் என கூறினார். பெண்களை தரக்குறைவாக பேசிய லியோனிக்கும் இது பொருந்தும் என கூறினார். உதயநிதி சசிகலாவை பற்றி விமர்சித்தது அனைவருக்கும் தெரியும். பிரதமர் 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவில் ஏராளமானோர் இணைகின்றனர். கருத்துக் கணிப்புகள் திமுகவிற்கு ஆதராக ஏற்கனவே வெளியிட்டன. திமுக ஆதரவள்ளாத ஊடகங்கள் அதிமுகற்கு சாதகமாக கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளதால் திமுக கலக்கத்தில் உள்ளது. அதன் வெளிப்பாடு தான் திமுகவினர் பெண்களை தரக்குரைவாக பேசி வருகின்றனர் என தெரிவித்தார்.