கவர்ச்சி இல்லாமல் எதை வைச்சி ஜெயிச்சீங்க? முதல்வரை கடுமையாக விமர்சித்து உதயநிதி

Tamil nadu C Joseph Vijay
By Manchu Jun 05, 2026 05:35 PM GMT
Report

உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக நன்றி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், முதல்வர் விஜய்யை சரமாரியாக தாக்கி பேசியுள்ளார்.

முதல்வர் விஜய்

தவெக கட்சி தலைவரான விஜய் தற்போது தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று செயலாற்றி வரும் நிலையில், எதிர்கட்சிகளின் பல விமர்சனத்திற்கு சமீபத்தில் பதிலளித்தார்.

திமுக குறித்து விஜய் பேசுகையில், 6 மாதம் எதுவும் பேச மாட்டோம் என்று கூறியவர்கள் 6 நாட்கள் கூட பொறுத்துக்கொள்ளவில்லை என்று கூறினார்.

அண்ணாமலையின் இயக்கம் பாஜகவின் மற்றொரு முயற்சி - காங்கிரஸ், கம்யூனிஸ்ட் விமர்சனம்

அண்ணாமலையின் இயக்கம் பாஜகவின் மற்றொரு முயற்சி - காங்கிரஸ், கம்யூனிஸ்ட் விமர்சனம்

மேலும் கவர்ச்சியை வைத்து ஜெயித்ததாக கூறியுள்ளதற்கு, முதல்வர் கோபமாக நல்லா வாயில வந்திடும் என்று கூறியதுடன், திமுக தரப்பிலுள்ள தவறுகளை சுட்டிக்காட்டினார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் நன்றி கூறுவதற்கு சென்ற இடத்தில் இவ்வாறு பேசியிருந்தார்.

கவர்ச்சி இல்லாமல் எதை வைச்சி ஜெயிச்சீங்க? முதல்வரை கடுமையாக விமர்சித்து உதயநிதி | Udhayanidhi Stalin Criticize Cm Joseph Vijay

உதயநிதி விமர்சனம்

தற்போது வன்கொடுமை பிரச்சனை அதிகமாக நடைபெற்றுவரும் நிலையில் சிங்கப்பெண் அதிரடிபடை குறித்தும் உதயநிதி விமர்சனம் வைத்தார்.

அதுமட்டுமின்றி திருச்சியில் நன்றி கூறுவதற்கு நாங்கள் தான் போய் சொல்லுங்க என்று கூறினோம். அதன் பின்பு தான் தவெக தலைவர் சென்றார் என்றும் அவர்கள் வெற்றியடைந்தது கவர்ச்சி அல்லாமல் வேறு எதையை வைத்து ஜெயித்தார்கள்.

கவர்ச்சி இல்லாமல் எதை வைச்சி ஜெயிச்சீங்க? முதல்வரை கடுமையாக விமர்சித்து உதயநிதி | Udhayanidhi Stalin Criticize Cm Joseph Vijay

நாங்கள் அவர் அணிந்த கோட்டைக் குறித்து பேசவில்லை கோட்டை விட்டதைக் குறித்து தான் கேள்வி எழுப்புகின்றோம். கருணாநிதி, ஸ்டாலின் போன்ற முன்னாள் முதல்வர்கள் சிறைக்கு சென்று வந்தார்கள். இவர்கள் அவ்வாறு என்ன செய்துவிட்டார்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.