இபிஎஸ் என்னுடைய காரை எடுத்து கொண்டு கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள் - உதயநிதி பேச்சால் கலகலப்பு..!
சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில கோரிக்கை மீது உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையால் சட்டப்பேரவை கலகலப்பானது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில கோரிக்கைள் மீதான விவாதத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,
தனது உரையை தொடங்கிய அவர் எனக்கு இன்று பேச வாய்ப்பளித்த முதலமைச்சர்,துரைமுருகன் மற்றும் கொறடாவுக்கு நன்றி தெரிவித்தார்.
அதை தொடர்ந்து பேசிய அவர்,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்னுடைய காரை எப்போது வேண்டுமானலும் எடுத்து செல்லலாம் என்றும் அந்த காரை எடுத்துக் கொண்டு கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள் என்று சொன்ன போது பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
மேலும் எதிர்க்கட்சி தலைவருக்கும்,துணை தலைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார். கடந்த ஆண்டு நான் பேசும் போது வெளிநடப்பு செய்து விட்டார்,நேற்றும் வெளிநடப்பு செய்து விட்டார்.
இன்று நான் பேசும் போது உள்ளே இருக்கிறார். அப்படியே வெளிநடப்பு செய்தாலும் என் காரில் தான் ஏற செல்கிறீர்கள் என்றவுடன் சிரிப்பலை எழுந்தது.
மேலும் அவர்,அடுத்த முறை தாராளமாக அடுத்த முறை என்னுடைய காரை எடுத்துக்கொண்டு போங்க என்றார். நானும் 3 நாட்கள் முன்பு உங்களது காரில் ஏற சென்றேன் என்றதால் பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது.