உதயநிதி ஸ்டாலின் காரில் தவறுதலாக ஏற முயன்ற எடப்பாடி - பதறிப்போன காவலர்கள்
நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 3.52 மணி நடந்து முடிந்தது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 4வது கேட் வழியாக வெளியே வந்தார்.
அப்போது, தொலைக்காட்சி நிருபர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டபடி நடந்து வந்துக் கொண்டிருந்தனர். அப்போது, யாருக்கும் பதில் சொல்லாமல் அமைதியாக எடப்பாடி நடந்து வந்துக்கொண்டிருந்தார்.
பின்னர் அங்கு நின்ற சாம்பல் நிறத்திலான இன்னோவா காரில் ஏற முயற்சி செய்தார். கார் கதவு திறக்கவில்லை.
உடனே, அங்கிருந்தன பாதுகாப்பு காவலர் ஒருவர், ‘சார் இது உங்கள் கார் இல்லை... இது உதயநிதி ஸ்டாலின் அவர்களுடையது” என்றார்.
உடனே, சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, சாரி சார்... நான் நம்ம வண்டின்னு நினைச்சுட்டேன்.. ’ என்று கூறிவிட்டு, அந்த காருக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த, சாம்பல் நிறத்திலான இன்னோவா காரில் எடப்பாடி ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இந்நிகழ்வு நேற்று தலைமைச்செயலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.