இந்த பழனிச்சாமி மீசை, வேட்டி, மானம் குறித்து பேசலாமா - உதயநிதி ஆவேசம்
உதயநிதி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடியுள்ளார்.
உதயநிதி பரப்புரை
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கணபதி நகர் பகுதியில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார்.
அதில், கலைஞரின் பேரன் பெரியாரின் பேரனுக்கு வாய்ப்பு கேட்டு வந்து இருக்கின்றேன். 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைக்க வேண்டும். அதிமுக வேட்பாளரை ஓட்டு கேட்கவிடாமல் விரட்டியடிக்கின்றனர்.
விமர்சனம்
இதை தொலைகாட்சியில் பார்க்க முடிகின்றது. அந்த விரக்தியில், இங்கு வந்தபோது ஆம்பளையா? என பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆம்பளையாக இருந்தால் மீசை இருக்க வேண்டும், வேட்டி கட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்கின்றார். அவருக்கு மீசை இருக்குன்னு தெரியும்.
தலைமை செயலகத்தில் சிபிஜ சோதனை நடத்தியபோது, தூத்துகுடியில் துப்பாக்கி சூடு நடத்திய போது அந்த மீசை என்ன செய்தது. 5, 6 நாள் சேவிங் பண்ணாமல் இருந்தால் மீசை வந்துவிடும். பெண்ணின் சம உரிமைக்கு போராடிய பெரியாரின் மண்ணில் இருந்து இதை பேசியிருக்கின்றீர்கள்.
நீங்கள் மக்களால் தேர்வு செய்யபட்டவரா? நீங்க எப்படி முதல்வரானீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் எனச் சாடியுள்ளார்.