சட்டப்பேரவையில் உதயநிதியின் கன்னி பேச்சு!
By Irumporai
இன்றைய சட்டமன்றத்தில் விவாதத்தின் போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது கன்னிப் பேச்சை பேசினார்.இதுதான் அவரது முதல் சட்டசபை பேச்சாகும்.
முதல் பேச்சிலேயே, நீட் தேர்வு பற்றிதான் பேசினார். தமிழக மக்கள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா பெயரை அரியலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சூட்டவேண்டும் என்று உதயநிதி கோரிக்கை வைத்தார்.