முதலமைச்சர் பேசிய வீர வசனம் தற்போது என்னாச்சு? உதயநிதி ஸ்டாலின் அதிரடி
முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள விஜய்யின் செயல் குறித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர்
தவெக கட்சியின் தலைவரான விஜய் தற்போது முதல்வர் பதவியில் வகித்து வரும் நிலையில், தேர்தல் பரப்புரையின் போது பல வாக்குகளை முன் வைத்தனர்.
குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு முக்கியமாக ஒன்றாக இருக்கும் என்று கூறிய நிலையில், சமீப நாட்களில் குழந்தைகள் அடுத்தடுத்து பலாத்காரம் செய்து கொலை செய்ததுடன், காணாமல் போகவும் செய்துள்ளனர்.

இதனை எதிர்கட்சி தலைவர்கள் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு சரமாரியாக கேள்வியினை எழுப்பி வருகின்றனர்.
முதலைமைச்சர் இந்த குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு என்ன ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுத்துள்ளார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
உதயநிதியின் பதிவு
உதயநிதி போட்ட பதிவில், தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டை கொலைகள், பாலியல் குற்றங்கள் என நிகழ்ந்து வருகின்றது.
கோவை சூலூர் சிறுமியின் அதிர்ச்சி மீள்வதற்குள், விழுப்புரத்தில் மற்றொரு சிறுமி இதே கொடுமையில் சிக்கியுள்ளார். மதுரையில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கோவை இளம்பெண் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, சென்னை பெரம்பூரில் போதை கும்பல் 13 வாகனங்களின் கண்ணாடியினை உடைத்து அட்டூழியம் என அடுத்தடுத்து செல்கின்றது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, இது தமிழ்நாடா? உத்தரபிரதேசமாக? உங்களது சிங்கப்பெண் அதிரடி எங்கே சென்றது? தேர்தலில் வீர வசனங்களை பேசியவர் தற்போது ஏன் வாய் திறக்க மறுக்கின்றார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கண்துடைப்பிற்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தினை நடத்தி அறிக்கை வெளியிட்டதை ஏற்கமுடியாது... நிலமையின் தீவிரத்தினை அரசு உணர வேண்டும் என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
மாகாணசபைத்தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் - சிவில் சமுகங்கள் ஒன்றிணைவு : உடன்பாடும் கைச்சாத்து IBC Tamil
இந்தியாவிடம் அடிபணிந்தது அனுர அரசு : தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் என விமல் கொந்தளிப்பு IBC Tamil