அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்: இபிஎஸ்-க்கு அழைப்பு - துர்கா ஸ்டாலின் ஸ்கெட்ச்!
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரை செய்ததின் பேரில், ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, நாளை காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதில் ஆளுநர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இபிஎஸ்-க்கு அழைப்பு
விழாவில் கலந்துகொள்வதற்காக 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற போது கொரோனா நெருக்கடி காரணமாக பலரையும் அழைக்க முடியவில்லை என துர்கா ஸ்டாலின் உதயநிதியின் பதவியேற்பு அழைப்புக்கு பெரிய லிஸ்ட் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.