பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்படுமா? - துணை முதல்வர் உதயநிதி பதில்
பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கபடுவது குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
மெரினா உணவுத் திருவிழா
மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் கடந்த டிசம்பர் 20 முதல் டிசம்பர் 24 ஆம் தேதி வரை உணவுத் திருவிழா நடைபெற்றது.
இந்த உணவுத் திருவிழா வெற்றி பெற்றதையடுத்து மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
உதயநிதி ஸ்டாலின்
இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உணவுத் திருவிழாவில் சிறப்பாக செயல்பட்ட 138 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 5 நாட்களை நடந்த இந்த உணவு திருவிழாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். 1.5 கோடி அளவிற்கு உணவு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதலான அரங்குகளுடன் பிரம்மாண்டமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்படுமா என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர் என கேட்டகப்பட்ட போது, அது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க முடியும்" என பதிலளித்தார்.