முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

Udhayanidhi Stalin
By Fathima Aug 06, 2026 08:09 AM GMT
Report

காவிரி பிரச்சனை தொடர்பில் நாளை நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தைரியம் இருந்தால் முதலமைச்சர் எழுந்து பதில் சொல்லட்டும் என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால்.

சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

இன்றைய நாளில் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்ட திமுக எம்எல்ஏக்கள் பட்ஜெட் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், மேகதாது பிரச்சனை, பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், காவிரி நீர் விவகாரம் என தவெக ஆட்சியில் விவசாயிகள் அதிகம் காதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்றைய தினம் கருப்பு சட்டை அணிந்து வந்தோம். நாளைய கூட்டத்தில் காவிரி பிரச்சனைகள் குறித்து விவாதிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளோம்.

அவர் அனுமதி அளிப்பார் என நம்புகிறேன், நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தைரியம் இருந்தால் முதலமைச்சர் பதில் சொல்லட்டும் என தெரிவித்தார்.