அமுதனை கொன்றுள்ளனர்.. கோஷ்டி மோதல் அல்ல- உதயநிதி ஸ்டாலின்

Coimbatore
By Fathima Aug 17, 2026 04:47 AM GMT
Report

4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் கோவை மாணவன் கொலை தொடர்பாக திமுக கொண்டு வந்த கவனயீர்ப்பு தீர்மானம் விவாதம் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கோவை கல்லூரி மாணவன் கொலையை அமைச்சர் ராஜ்மோகன் கோஷ்டி மோதல் என கூறினார்.

இரண்டு தரப்புகள் அடித்துக்கொண்டால் தான் அது கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் சேர்ந்து அடித்துள்ளனர், போதைப்பொருள் பழக்கம் குறித்து தகவல் அளித்ததால் தான் அமுதனை கொன்றுவிட்டதாக அவரது பெற்றோர் கூறினர்.

அமுதனை கொன்றுள்ளனர்.. கோஷ்டி மோதல் அல்ல- உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhi Speaks About Amudhan Case

திருவொற்றியூர் பள்ளி மாணவன் தனுஷ் கொலை செய்யப்பட்டுள்ளான், போதை கலாசாரத்தை எதிர்த்து நிற்கும் ஒவ்வொரு நபருக்கும் இது ஒரு எச்சரிக்கை சம்பவமாக இருக்கிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல கொலைகள் நடந்துள்ளன, 100 நாள் சாதனை என பேசும் தவெக 100 நாட்கள் சட்டம் ஒழுங்கு குறித்தும் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் போதைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு, வன்முறைக்கு எதிராக கவுன்சிலிங் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.