அவங்கள மாதிரி எனக்கும் வேலையில்லை என நினைத்துக் கொண்டார்களா? உதயநிதி காட்டம்!
அஜித்துக்கு வாழ்த்து குறித்து தமிழிசையின் விமர்சனதுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
உதயநிதி
நடிகர் அஜித் ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் மோட்டார் ரேஸிங் போட்டியில் பங்கேற்க உள்ளார். அதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழிசை சௌந்தர்ராஜன்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஜித்துக்கு வாழ்த்து கூறியுள்ளார். அஜித்துக்கு வாழ்த்து கூறினால்
விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக உதயநிதி ஸ்டாலின் அஜித்திற்கு வாழ்த்து கூறியுள்ளாரா என்று எனக்கு தெரியவில்லை என்று விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ளா 108 அவசர ஊர்தியின் கட்டுப்பாட்டு மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சராசரியாக 108 அவசர உதவி மையத்துக்கு நாளொன்றுக்கு 12 ஆயிரம் அழைப்புகள் வரும், தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் மற்றும் தீபாவளி பண்டிகை என்று 20,000 அழைப்புகள் வருவது வழக்கம்.
வேலை இல்லை..
எனவே அவசரகால மேலாண்மை மையத்தில் மூன்று ஷிப்டுகளில் கூடுதலாக 50 பேர் பணியமத்தப்பட்டு மொத்தம் 194 நபர்கள் அழைப்புகளை ஏற்கும் வண்ணம் பணியமத்தப்பட்டுள்ளனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே தீக்காய பிரிவில் 75 படுக்கைகள் உள்ளன. நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் கூடுதலாக 25 படுகைகளை ஏற்பாடு செய்துள்ளார்.
ஏனெனில் தீபாவளி பண்டிகை என்று தீ விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் அவசர மேலாண்மை மையத்தில்
பணிபுரிபவர்களுக்கு தேவையான அறிவுரைகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.என்றார்.இதையடுத்து, அஜிததுக்கு வாழ்த்து தெரிவித்ததை விமர்சித்த தமிழிசை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு,அவங்கள மாதிரி எனக்கு வேலை இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா என உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    