தாய்மாமன் தடியடி திட்டமா? செவிலியர்கள் கைதுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
udhayanidhi stalin slams cm vijay for arrest nurses: போராடும் செவிலியர்களின் குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் என்ன தாய்மாமன் தடியடி திட்டமா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது
பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கத்தினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 1000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.. போராட்டம் தீவிரமடைந்த நிலையில், செவிலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செவிலியர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 5 பிரதிநிதிகளை மாலை 7 மணி அளவில் தலைமைச் செயலகத்திற்கு காவல்துறை அழைத்துச் சென்றுள்ளது.
ஆனால், பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகி கைது செய்து வாகனத்தில் ஏற்றி அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.
செவிலியர்களின் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தாய்மாமன் தடியடி திட்டமா?
இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "பணி நிரந்தரம் - சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் செவிலியர்கள் மீது காவல்துறையினரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த Dummy CM-ன் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

எதிர்க்கட்சியாக இருந்த போது, ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்ன இன்றைய கோமாளி ஆட்சியாளர்கள், இன்றைக்கு செவிலியர் போராட்டத்திற்கு முதல் ஆளாக காவல்துறையை அனுப்பி அராஜகம் செய்கின்றனர்.
ஒருபக்கம், போராட்டக்களத்தில் சிறிய இடத்தில் செவிலியர்களை அடைப்பது - மின்சாரத்தை நிறுத்துவது - உயிர் வேணுமா வேண்டாமா என்று மிரட்டுவது என அத்துமீறும் இந்த ஆட்சியாளர்கள் - மறுப்பக்கம், Abusive Warriors மூலம் செவிலியர்களையும் - அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது அநாகரிகத்தின் உச்சம்.
செவிலியர்கள் மீது சிறு கீறல் விழுந்தாலும் பொறுக்க மாட்டோம் என அன்றைக்கு punch dialog பேசிவிட்டு, இன்றைக்கு போராடும் செவிலியர்களை மட்டுமின்றி அவர்களின் குழந்தைகள் மீது கூட தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடு.
குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் என்ன தாய்மாமன் தடியடி திட்டமா?
பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரை துடைப்பதற்காக நீளும் முதல்வரின் கரங்கள், உயிர்காக்கும் செவிலியர்களின் உண்மைக் கண்ணீரைத் துடைக்க மறுப்பது ஏன்?
செவிலியர்கள் மீதான அடக்குமுறையை உடனே நிறுத்தி, அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்" எனகுறிப்பிட்டுள்ளார் .
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan