சமூகநீதி நாளில் அரங்கேறியுள்ள சமூக அநீதி - தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

Udhayanidhi Stalin Government of Tamil Nadu
By Karthikraja Sep 17, 2026 01:33 PM GMT
Report

udhayanidhi stalin condemns govt for stop student bharathidasan scholarship fund: சமூகநீதி நாளில் தவெக அரசு சமூக அநீதியை அரங்கேறியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட பாரதிதாசன்

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில், திசு பொறியியல் மற்றும் மீளுருவாக்கதில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த பாரதிதாசன். 

சமூகநீதி நாளில் அரங்கேறியுள்ள சமூக அநீதி - தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் | Udhayanidhi Slam For Stop Bharathidasan Fund

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் அவரது படிப்புக்கு நிதியுதவி வழங்க அரசு ஒப்புதல் அளித்திருந்தது.

ஆனால், முதல் ஆண்டுக்கான நிதி வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் ஆண்டு தொடர்பான நிதியில் தாமதம் ஏற்பட்டதாக அவர் முன்னதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இது குறித்து சட்டமன்றத்தில் விளக்கமளித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, அவரது முதலாமாண்டு Ph.D. படிப்புக்குக் கல்விக் கட்டணம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் உரிய செலவினங்களுக்கான ஆவணங்களை அவர் 10 மாதங்கள் கடந்த பின்னரும் சமர்ப்பிக்காமல், 2-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகையாக கோரி வருவதால் ஏற்பட்டுள்ள சிக்கலை விவரித்தார்.

இந்நிலையில், இன்று கண்ணீர் மல்க மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள பாரதிதாசன், அமைச்சர் தரப்பிலிருந்து கேட்ட, தேவையான அனைத்து ஆதாரங்களையும் அனுப்பி விட்டேன். ஆனால் எனக்கு நிதி கிடைக்கவில்லை. 

என்னால் எனது ஆராய்ச்சி படிப்பை தொடர மூடியதால் சூழல் உள்ளது. அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி என்னை ஒடுக்க நினைக்கிறது. என் கிராமத்திலிருந்து வெளிநாட்டிற்கு படிக்க சென்ற முதல் மாணவன் நான்தான் என பேசியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

இதனையடுத்து, மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் SofaModel அரசை வன்மையாக கண்டிக்கிறேன். 

தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம்.

மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது.

ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது. அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும்  அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த Reels அரசு துணை நிற்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.