நீட் தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட மாபெரும் உயிர்கொல்லும் Scam - உதயநிதி ஸ்டாலின்
நீட் தேர்வு மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வால் உயிரிழப்பு
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு, கடந்த மே 3 ஆம் திகதி நடைபெற்ற இருந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, ஜூன் 22 ஆம் தேதி மறு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட விரக்தி மற்றும் அச்சத்தில் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவ, மாணவிகள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட நீட் மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது என விமர்சித்துள்ளார்.
மாபெரும் உயிர்கொல்லும் Scam
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட #NEET, Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது.
மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும். கழகத்தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் - சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும்.
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
— Udhay (@Udhaystalin) June 19, 2026
எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின்…
இந்த நேரத்தில், NEET தேர்வுக்குத் தயாராகும் தம்பி - தங்கைகள், Exam Stress-க்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.